மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கடந்த சில வாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் டொவினோ தாமஸ், கல்யாணி பிரியதர்ஷன் இணைந்து நடித்த தள்ளுமால என்கிற திரைப்படம் தியேட்டர்களில் வெளியானது. எப்போதுமே யாருடனாவது சண்டை இட்டுக்கொள்ளும் அடிதடி இளைஞர் கூட்டத்தை பற்றிய படமாக இந்தப்படம் உருவாகி இருந்தது. ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பையும் பெற்றது.
இந்த நிலையில் இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. அதேசமயம் இந்த படத்திற்காக படத்தின் வசனகர்த்தாக்களால் எழுதி கொடுக்கப்பட்ட ஆங்கில சப்டைட்டில்களை மாற்றிவிட்டு பல இடங்களில் வேறுவிதமான அர்த்தம் வரும் வார்த்தைகளை ஹாட்ஸ்டார் குழுவினர் இணைத்திருக்கிறார்கள் இதைப்பார்த்து படத்தின் வசனகர்த்தாக்களும் படத்திற்கு கதை எழுதிய கதாசிரியர் முஷின் பெராரியும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, “மலையாளத்தில் இடம்பெறும் வார்த்தைகளுக்கு ஏற்ற ஆங்கில வார்த்தைகளை தேர்ந்தெடுத்து சப்டைட்டிலுக்கான வசனங்களை எழுதியுள்ளோம். கதாசிரியரின் ஒப்புதலுடன் தான் ஹாட்ஸ்டாருக்கு அவற்றை வழங்கினோம். ஆனால் இப்போது அவற்றில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதை பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது. சில வார்த்தைகள் அந்த காட்சியின் அர்த்தத்தையே மாற்றிவிடும் விதமாக இடம் பெற்றிருக்கின்றன” என்று தங்களது வருத்தத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.