அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி | பாலியல் குற்றச்சாட்டு : சைபர் கிரைமில் விஜய்சேதுபதி புகார் |
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், ஹீரோ வில்லன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ள படம் நானே வருவேன். தனுசுடன், எல்லி அவ்ரம், இந்துஜா, செல்வராகவன், யோகிபாபு உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ள இந்த படம் ஹீரோவுக்கும் வில்லனுக்கும் இடையே நடக்கும் பிரச்னைகளை மையமாகக் கொண்ட கதையில் உருவாகி இருப்பதாக சமீபத்தில் தனுஷ் அப்படத்தின் ஒன் லைனை வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் இம்மாதம் 30ம் தேதி வெளியாகும் நானே வருவேன் படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா விரைவில் பிரமாண்டமாக நடக்க இருப்பதாக தயாரிப்பாளர் எஸ்.தாணு தெரிவித்துள்ளார். குறிப்பாக, சமீபத்தில் பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு படங்களின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது போன்று நானே வருவேன் படத்தின் இசை விழாவும் பிரமாண்டமாக நடைபெற இருப்பதாக அவர் ஒரு தகவல் வெளியிட்டுள்ளார்.