லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
'மதுரை வீரன் அழகுல மாட்டு கொம்பு திமிருல, பாவி நெஞ்சு சிக்கிக்கிச்சே... மாருல ஏறிட எடம்தா, மீசைய நிமிர வரட்டா, உடுத்துற வேட்டிய போல, ஒட்டிக்கிட்டு வரப்போறேன் டா' என முதல் படத்திலேயே நடித்து, பாட்டு பாடி ரசிகர்களின் இதயங்களை திருடிய அதிதி மனம் திறக்கிறார்...
டாக்டர் அதிதி ஆக்டர் அதிதி ஆனது எப்படி
டாக்டர் ஆகணும்னு தான் படிச்சேன்; ஆனால் என் பேஷன் சினிமாவில் இருந்தது. அதனால் நடிக்க வந்து விட்டேன்.
பாட்டும் கூட நல்லா தானே பாடுறிங்க?
5 வயதில் இருந்து பாட்டு கத்துகிட்டேன். 8 ஆண்டுகள் கர்நாடக இசை கத்துகிட்டேன். வெர்ஸ்டன் பாப், ஹிந்துஸ்தானி என இப்போ வரை பாட பயிற்சி எடுத்து கொண்டு தான் இருக்கேன். யுவன் இசையில் 'விருமன்' படத்தில் 'மதுரை வீரன் அழகுல' பாடியதில் மறக்க முடியாத அனுபவம்.
அப்பா ஷங்கர் படத்தில் அறிமுகம்?
அப்பாவும் அது பற்றி நினைக்கல. நானும் அதை விரும்பல. எதிர்காலத்தில் அப்பா படத்தில் ஒரு ரோல் இருந்து 'நீ சரியா இருப்ப, பண்றியாம்மா'னு கேட்டா பண்ணுவேன். ஆனால், கிராமத்து கதையில் இயக்குனர் முத்தையா, ஹீரோ கார்த்தி படத்தில் அறிமுகமானதில் சந்தோஷம்.
கார்த்தி உடன் நடித்த அனுபவம்?
இந்த படத்தில் இப்படி இருந்தேன், அந்த படத்தில் அதை மாற்றினேன் என எல்லாம் எனக்கு சொல்லி தந்தார். இப்படி நடித்து பார் சரியா வரும்னு சொல்வாரு. முதல் படத்தில் அவரோடு நடித்தது கடவுள் செயல்
அப்பா நடிக்க ஓகே சொன்னாரா?
அம்மா கிட்ட டிஸ்கஸ் பண்ணிட்டு, 'அப்பாவாக முடிவு எடுக்க கஷ்டமா இருக்கு. இயக்குனரா நான் நோ சொன்னால் தொழிலுக்கு தப்பு... நீ போன்னு' அனுப்பினார்.
அப்பாவின் படப்பிடிப்பு தளத்திற்கு போவீங்களா?
பட காட்சிகள் எடுக்கும் போது கூப்பிட மாட்டார். பாட்டு எடுக்கும் போது கூப்பிட்டு போவார். 'சிவாஜி' படத்தில 'வாஜி வாஜி' பாடல் எடுக்கும் போது ராமோஜிராவ் பிலிம் சிட்டி கூப்பிட்டு போனார்.
உங்கள் மீது அன்பு செலுத்திய மக்களுக்கு...
என்னை இவ்வளவு துாரம் வரவேற்றதற்கு, சிறந்த நடிகை என்று ஏற்று கொண்டதற்கு, அன்பு மழை பொழிந்ததற்கு ரொம்ப நன்றி. இதே மாதிரி இன்னும் என்னை லவ் பண்ணுங்கன்னு கேட்டுக்கிறேன்.