ஜூலை 25ல் ‛அவதார் 3' டிரைலர் | இசை நிகழ்ச்சி! கெனிஷா உடன் இலங்கை சென்ற ரவி மோகன் | ‛பராசக்தி' படத்தில் இணைந்த ராணா | வார் 2 படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு | மாரி செல்வராஜின் 'பைசன்' பிஸினஸ் எப்படி? | இறுதிக்கட்டத்தை எட்டிய ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் படம் | இலங்கை தமிழ் படத்தில் டி.ஜே.பானு | புராண அனிமேஷன் படத்திற்கு 'யுஏ' சான்றிதழ் | வசூலை குவிக்க அடுத்து வருகிறது 'ட்ரான்: ஏரிஸ்' | அனிருத் இசை நிகழ்ச்சி திடீர் ரத்து |
கமல் - ஷங்கர் கூட்டணியில் கடந்த 27 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் இந்தியன். இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி வருகிறது. கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பே இந்த படம் துவக்கப்பட்டாலும் சில பிரச்சனைகள் காரணமாக இடையில் தேக்கம் ஏற்பட்டு, தற்போது மீண்டும் முழுவீச்சுடன் துவங்கப்பட்டுள்ளது.
கதாநாயகிகளாக காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடிக்கின்றனர். இந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் புதிதாக விவேக் கதாபாத்திரம் இணைக்கப்பட்டு சில காட்சிகளும் படமாக்கப்பட்டன. ஆனால் இடையில் எதிர்பாராதவிதமாக விவேக் காலமானதால் தற்போது அவருக்கு பதிலாக இந்தப் படத்தில் நடிகர் குருசோமசுந்தரம் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.
அதேப்போல முதல் பாகத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நெடுமுடி வேணுவின் கதாபாத்திரமும் இந்த இரண்டாம் பாகத்தில் தொடர்வதாக உருவாக்கப்பட்டிருந்தது. அவரும் சில நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார். இந்தநிலையில் அவரும் சில மாதங்களுக்கு முன்பு காலமானார். அதனால் அவர் நடித்த கதாபாத்திரத்தில் இன்னொரு மலையாள நடிகரான நந்து பொதுவால் என்பவர் நடிக்க இருக்கிறார். மலையாளத்தில் குணசித்திர நடிகராக பல படங்களில் நடித்துள்ள இவர், கிட்டத்தட்ட மறைந்த நடிகர் நெடுமுடி வேணுவின் சாயலிலேயே இருக்கிறார் என்பதால் இந்த கதாபாத்திரத்திற்கு இவரை தேர்வு செய்துள்ளாராம் ஷங்கர்.