'பிளாக்மெயில்' புதுவித அனுபவமாக அமைந்தது : தேஜூ அஸ்வினி | 3 நாயகிகள் இணையும் 'தி வைவ்ஸ்' | வேலு பிரபாகரனின் கடைசி படம் | பிளாஷ்பேக் : 450 படங்களுக்கு இசை அமைத்த டப்பிங் கலைஞர் | பிளாஷ்பேக் : சிங்கள சினிமாவின் ஆஸ்தான இசை அமைப்பாளர் | ஆக்ஷன் படங்கள் பண்ண ஆசை : திரிப்தி திம்ரி | திலீப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் மோகன்லால் | 100 கோடி வசூலைக் கடந்த 'சாயரா' | இப்போதே ரூ.25 கோடி அள்ளிய 'ஹரிஹர வீரமல்லு' | சாய் அபயங்கர் இசையமைத்த முதல் டீசர் 'கருப்பு' : ரசிகர்கள் எதிர்பார்ப்பு |
விக்ரம் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது. தற்போது இந்த படத்தின் கதை, திரைக்கதை பணியில் ஈடுபட்டு வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதற்காக சோசியல் மீடியாவிலிருந்து கூட தற்காலிகமாக அவர் விடைபெற்றுக் கொண்டுள்ளார். எப்போதுமே லோகேஷ் கனகராஜ் படங்களின் கதை விவாதத்தில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர் இயக்குனர் ரத்னகுமார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்..
தற்போது இந்த கூட்டணியில் புதிதாக கதை விவாதத்தில் தன்னை இணைத்துக் கொண்டு உள்ளார் இயக்குனர் தீரஜ் வைத்தி. இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சித்தார்த் நடிப்பில் வெளியான ஜில் ஜங் ஜக் என்ற படத்தை இயக்கியவர். விஜய் 67 படத்தில் விஜய்யின் காமெடி காட்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட இருப்பதால், காமெடி வசனங்களை எழுதுவதில் வல்லவரான தீரஜ் வைத்தியையும் இந்த கதை விவாதத்திற்குள் இழுத்துக் கொண்டுள்ளாராம் லோகேஷ் கனகராஜ்.