நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
வம்சி பைடி பள்ளி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில வீடியோக்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி படக்குழுவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதலில் ஒரு மருத்துவமனை வீடியோ வெளியான நிலையில், அடுத்து விஜய்- ராஷ்மிகா மந்தனா நடிக்கும் இன்னொரு வீடியோவும் வெளியானது. இதனால் தற்போது பலத்த செக்யூரிட்டியுடன் வாரிசு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் உள்ள எண்ணூரில் நடைபெற்று வருகிறது. அங்கு ரஜினி நடித்த ஒரு காட்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடத்திய போதும் அதை எல்லாம் மீறி இப்படி ஒரு புகைப்படம் வெளியானதை அடுத்து ஜெயிலர் ஷூட்டிங் ஸ்பாட்டில் செக்யூரிட்டி மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.