பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
விக்ரம் நடித்துள்ள கோப்ரா படம் வருகிற 31ம் தேதி வெளிவருகிறது. இந்த படத்தை விளம்பரப்படுத்தும் சுற்றுப்பயணத்தில் இருக்கிறார் விக்ரம். அவருடன் நாயகிகள் ஸ்ரீநிதி, மிருணாளினி ரவி, மீனாட்சி கோவிந்தராஜன் ஆகியோரும் செல்கிறார்கள்.
இதன் ஒரு பகுதியாக சென்னையில் நடந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் விக்ரம் பேசியதாவது: இயக்குநர் அஜய் ஞானமுத்து, டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் என ஒவ்வொரு படமும் வித்தியாசமான ஜானரில் இயக்கியிருந்தார். கோப்ரா படத்தையும் அவர் வழக்கமானதைக் காட்டிலும் புதிதாக இயக்கியிருக்கிறார். இந்தப்படம் அவருடைய கற்பனை படைப்பு. நாங்கள் எல்லாம் அதற்கு ஒத்துழைப்பை வழங்கி இருக்கிறோம்.
என்னுடைய நடிப்பில் தயாரான திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த படத்திற்காக திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என ஒவ்வொரு இடத்திற்கு செல்லும்போதெல்லாம் ரசிகர்களின் வரவேற்பும், அவர்கள் காட்டும் அன்பும் பிரமிக்க வைத்தது. அவர்கள் என் மீது காட்டும் அன்பை அளவிட முடியாது. தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய இடங்களுக்கும் சென்று ரசிகர்களை சந்திக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறது. கோப்ரா படத்திற்கு படக்குழுவினர் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 31ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. ஆதரவு தாருங்கள். என்றார்.
நிகழ்ச்சியில் விக்ரம் ஹீரோயின்களுடன் ஜாலியாக கலந்துரையாடினார். இதில் பேசிய மீனாட்சி கோவிந்தராஜனும், மிருணாளினி ரவியும் “படப்பிடிப்பு இரவில் நடக்கும்போது நாங்கள் களைப்பால் நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கி விடுவோம். திடீரென விக்ரம் சார் எங்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பி விடுவார். நாங்கள் தூங்குவதை வீடியோ எடுத்து வைத்துக் கலாய்ப்பார். திடீரென முகத்து நேராக உணவு தட்டை ஏந்தி நின்று கொண்டு சாப்பிடச் சொல்வார். இப்படி படப்பிடிப்பு காலங்களில் எங்களை நிறைய கலாட்டா செய்து செல்லமாக டார்ச்சர் செய்தார்” என்றார்கள்.