மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
இயக்குனர் ஷங்கர் எப்போதுமே மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமான படங்களை எடுப்பவர். அதனால் அவர் ஒரு படத்தை இயக்கி முடித்ததும் தான், அடுத்த படத்திற்கு செல்வார். ஆனால் தற்போது கொரோனா தாக்கம் உள்ளிட்ட சில கால சூழ்நிலைகளால், ஒரே நேரத்தில் இரண்டு படங்களை இயக்கும் சூழ்நிலைக்கு ஆளாகி இருக்கிறார் இயக்குனர் ஷங்கர்.
25 வருடங்களுக்கு முன்பு கமல் - ஷங்கர் கூட்டணியில் வெளியாகி வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு துவங்கினார் ஷங்கர். லைக்கா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க தொடங்கியது. படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து மற்றும் கொரோனா தாக்கம் என சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த நிலையில் அப்படியே நிறுத்தப்பட்டது. அதன்பிறகு ஷங்கர் தெலுங்கில் ராம்சரண் படத்தை இயக்கப்போவதாக அறிவித்து அந்த படத்தின் படப்பிடிப்பையும் கிட்டத்தட்ட பாதிக்கு மேல் நடத்தி முடித்து விட்டார்.
இந்தியன் 2 படத்தை அப்படியே விட்டுவிட்டு ராம்சரண் படத்தை இயக்க சென்றதால் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் ஷங்கருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இடையில் அரசியல் பயணம், பிக் பாஸ் நிகழ்ச்சி என கமல் திசை மாறியதால் இந்தியன் 2 மீண்டும் துவங்கப்படுமா என்கிற கேள்வியும் எழுந்தது. மேலும் கமலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிப்பதாக அறிவித்து அதில் கவனம் செலுத்த துவங்கி விட்டார்.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியான விக்ரம் திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி, இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் உடனடியாக ஆரம்பிக்கும் சூழலுக்கு கவலையும் ஷங்கரையும் உற்சாகப்படுத்தி உள்ளது. இதனால் இந்தியன் 2 தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளையும் மறந்து இந்த படத்தின் படப்பிடிப்பை துவக்குவதற்கு ஆயத்தமாகிவிட்டார் ஷங்கர்.
விக்ரம் படத்தின் வெளியீட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் பங்களிப்பு உதவிகரமாக இருந்ததால், தற்போது இந்தியன் 2 படத்தின் தயாரிப்பில் அவர்களையும் இணைந்து கொள்ள சொல்லிவிட்டார் கமல். இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு மீண்டும் நேற்று பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியுள்ளது.
அப்படி என்றால் ராம்சரண் படத்தை தள்ளி வைப்பாரா என்கிற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இந்தநிலையில் இது குறித்து விளக்கம் அளிக்கும் விதமாக ஷங்கர் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பும் ராம்சரண் படத்தின் படப்பிடிப்பும் ஒரே நேரத்தில் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
காரணம் இந்தியன் 2 படத்தை இயக்க சென்று விட்டால் ராம்சரண் படம் அப்படியே நின்று விடுமோ என அந்த படத்தின் தயாரிப்பாளர்கள் கலக்கத்தில் இருந்ததால் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு அந்த அறிவிப்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்தையும் அதன் தயாரிப்பாளர் தில் ராஜுவையும் டேக் செய்துள்ளார் இயக்குனர் ஷங்கர்.
இந்த இரண்டு படங்களின் ஹீரோக்கள் நடிக்கும் காட்சிகளை ஷங்கர் இயக்குவார் என்றும் ஹீரோக்கள் நடிக்காத, மேலும் நடனம் உள்ளிட்ட மற்ற காட்சிகளை அவரது இரண்டாவது யூனிட் துணை இயக்குனர்கள் இயக்குவார்கள் என்றும் சொல்லப்படுகிறது. அதை உணர்த்தும் விதமாக தான் ஒரே சமயத்தில் இந்த இரண்டு படத்தின் படப்பிடிப்புகளும் நடக்கும் என ஷங்கர் தற்போது அறிவித்துள்ளார் அந்தவகையில் வரும் செப்டம்பர் முதல் வாரத்தில் ராம்சரனின் படப்பிடிப்பு ஹைதராபாத் மற்றும் விசாகபட்டணத்தில் நடைபெறும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் ஷங்கர்.