ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
‛போடா போடி' படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி. தொடர்ந்து பல படங்களில் நாயகியாக மட்டுமல்லாது வில்லியாகவும் அசத்தி வருகிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பிஸியாக நடித்து வருகிறார். சற்று உடல் பெருத்து காணப்பட்ட வரலட்சுமி இப்போது அனைவரும் ஆச்சர்யப்படும்படி ஸ்லிம்மாக மாறி உள்ளார். இதை வெளிப்படுத்தும் விதமாக குட்டை கவுனில் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டுள்ளார்.
அதோடு இந்த மாற்றம் குறித்து, ‛‛மாற்றம் யாருக்கும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம். உங்களை முதலில் நம்புங்கள். உங்களால் என்ன செய்ய முடியும், முடியாது என்று மற்றவர்கள் சொல்ல தேவையில்லை. நம்பிக்கை தான் சிறந்த ஆயுதம். உங்களுக்கு நீங்களே சவால் விடுங்கள். உங்களுக்கு சிறந்த போட்டி நீங்கள் தான். உங்களால் எவ்வளவு சாதிக்க முடியும் என்று ஆச்சரியப்படுவீர்கள். நம்புங்கள்'' என பதிவுட்டுள்ளார் வரலட்சுமி.