ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
ஆந்திர அரசியலையும் என்.டி.ஆர் குடும்பத்தையும் பிரிக்க முடியாது. என்.டி.ராமராவ் 4 முறை ஆந்திர முதல்வராக இருந்தார். அவரது மருமகன் சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தார், என்.டி.ஆரின் மூத்த மகன் பாலகிருஷ்ணா சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். இந்த நிலையின் என்டிஆரின் பேரன் ஜூனியர் என்டிஆர் அரசியலுக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்திருக்கிறது.
சமீபத்தில் வெளியான ஆர்ஆர்ஆர் படம் மூலம் பான் இந்தியா ஸ்டார் ஆகிவிட்ட ஜூனியர் என்டிஆரை உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது ஐதராபாத் விசிட்டின் போது அவரே அழைத்து ஜூனியர் என்டிஆரை சந்தித்து பேசி உள்ளார். இது ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சந்திப்பு குறித்து அமித்ஷா கூறுகையில் “திறமையான நடிகரும், தெலுங்கு சினிமாவின் மாணிக்கமுமான ஜூனியர் என்டிஆரை சந்தித்தது மகிழ்ச்சி” என்று குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானாவின் நல்கொண்டா மாவட்டத்தில் உள்ள முனுகோட் சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜகோபால் ரெட்டி தனது பதவியை திடீரென ராஜினாமா செய்ததால் அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் வர உள்ளது. இதற்கான பிரச்சாரத்திற்குதான் அமித்ஷா ஐதராபாத் வந்துள்ளார். இந்த நேரத்தில் நடந்த இந்த சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சமீபத்தில் அமித்ஷா ஆர்ஆர்ஆர் படம் பார்த்தாகவும் அதில் சிறப்பாக நடித்த ஜூனியர் என்டிஆரை நேரில் அழைத்து பாராட்டினார். வேறு காரணம் எதுவும் இல்லை என்றும் கூறப்படுகிறது.