ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழ், தெலுங்கு உள்ளிட்ட சினிமாக்களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. இவரது வாழ்க்கையை தழுவி ஹிந்தியில் பத்து வருடங்களுக்கு முன்பு வெளியான படம் 'டர்ட்டி பிக்சர்'. நடிகை வித்யாபாலன் கதாநாயகியாக நடித்த இந்த படம் அவரது திரையுலக பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. இந்த நிலையில் 10 வருடம் கழித்து தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் முதல் பாகத்தை தயாரித்த தயாரிப்பாளர் ஏக்தா கபூர்.
இந்த இரண்டாம் பாகத்திற்கான கதையை தயார் செய்யும் பொறுப்பை பிரபல கதாசிரியர் கனிகா தில்லானிடம் ஒப்படைத்துள்ளார். அவருக்கு உதவியாக இன்னொரு கதாசிரியரும் இந்த இரண்டாம் பாகத்திற்கு பணிபுரிகிறார். அதே சமயம் முதல் பாகத்தில் கதாசிரியராக பணியாற்றிய ரஜத் அரோரா இந்த இரண்டாம் பாகத்தில் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இந்த படத்தில் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு கங்கனாவை ஏக்தா கபூர் அணுகியதாகவும் அதற்கு அவர் மறுத்து விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இன்னொரு பக்கம் இந்த படத்தின் கதாநாயகியாக நடிக்க டாப்ஸியும், கீரீத்தி சனானும் தங்களது விருப்பத்தை வெளியிட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. அதேசமயம் இந்த படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த வித்யா பாலன், இரண்டாம் பாகத்தில் நடிக்கிறாரா என்கிற பேச்சே எழவில்லை என்பது ஆச்சரியம் தான்.