தீபாவளிக்கு வெளியாகும் 'கருப்பு' படத்தின் முதல் பாடல்! | கார்த்தி, விஜய் சேதுபதி போன்ற நடிகர்களால் தான் நல்ல கதை பெரிய படமாக வருகிறது! நலன் குமாரசாமி | சம்பளத்தை குறைத்து கொண்ட விக்ரம்! | ஹ்ரித்திக் ரோஷன் தயாரிப்பில் உருவாகும் புதிய வெப் தொடர் | அர்ஜுன் படத்தின் புதிய அப்டேட்! | 'சீன்'களை திருடும் இயக்குனர் | நான் ‛அப்புக்குட்டி' ஆனது இப்படித்தான் | ரசிகர்கள் 'இன்டலிஜென்ட்': சாய் பிரியா சர்டிபிகேட் | பிளாஷ்பேக்: ஒரு செல்லாத ரூபாயின் கதை தந்த யோசனை, என் எஸ் கிருஷ்ணனின் “பணம்” திரைப்படம் | தில்லானா மோகனாம்பாள், அவ்வை சண்முகி, ஜெயிலர் - ஞாயிறு திரைப்படங்கள் |
நடிகர் கமல்ஹாசன் தற்போது பிஸியாக இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிக்கவுள்ளார். இது கமல்ஹாசனின் 234 படமாக உருவாகிறது. இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகைகள் த்ரிஷா, நயன்தாரா உடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால் அவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் நடிக்கவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க தற்போது பாலிவுட் கதாநாயகி வித்யா பாலன் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பே மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த குரு படத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.