டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகக் கருதப்படுபவர் மிஷ்கின். நேற்று நடைபெற்ற 'கொலை' படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் 'கொலை' படத்தின் நாயகனான விஜய் ஆண்டனி நடித்த ஒரு படங்களைக் கூடப் பார்க்கவில்லை என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார். பொதுவாக சினிமாவில் உள்ளவர்கள் தமிழில் வெளியாகும் பல படங்களையும் பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள். அனைத்துப் படங்களையும் இல்லை என்றாலும் சில முக்கியமான படங்களையாவது இயக்குனர்கள் பார்த்துவிடுவார்கள்.
ஆனால், சினிமாவில் ஒரு நடிகராக அறிமுகமாகி பத்து ஆண்டுகளைக் கடந்தவர் விஜய் ஆண்டனி. அவருடைய நடிப்பில் வெளிவந்த 'பிச்சைக்காரன்' படம் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் கூட பெரிய வசூலைப் பெற்ற ஒரு படம். அந்த ஒரு படத்தைக் கூட மிஷ்கின் பார்க்கவில்லை என்பது ஆச்சரியம்தான்.
மிஷ்கின் அப்படிப் பேசியதைக் கண்டு என்ன ரியாக்ஷன் கொடுப்பது என்று தெரியாமல் அமைதியாக அவரையே பார்த்துக் கொண்டிருந்தார் மேடையில் இருந்த விஜய் ஆண்டனி. ஒரு நடிகரின் படத்தின் விழாவில் கலந்து கொள்ள சிறப்பு விருந்தினர்களை அழைக்கும் போது இது பற்றியெல்லாம் தெரிந்து அழைக்க வேண்டாமா ?.




