பிளாஷ்பேக்: மம்பட்டியான் பாணியில் உருவான 'கரிமேடு கருவாயன்' | பிளாஷ்பேக்: தமிழ், பெங்காலியில் உருவான படம் | கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை |
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பு துவங்கி உள்ளது. வருகிற 15ம் தேதி முதல் ரஜினிகாந்த் கலந்து கொள்ளப் போகிறார். ரஜினியுடன் ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார் என பலர் நடிப்பதாக கூறப்பட்டு வரும் நிலையில் தற்போது ரஜினிக்கு ஜோடியாக தமன்னா நடிப்பதாக புதிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே ரஜினியுடன் எந்திரன் படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராய் தான் இந்த படத்திலும் ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்பட்டும் நிலையில், இப்போது திடீரென்று தமன்னாவின் பெயரும் அடிபடுகிறது. அப்படி என்றால் ஜெயிலர் படத்தில் ஐஸ்வர்யா ராய் நடிக்கவில்லையா? என்கிற கேள்விகளும் எழுந்து இருக்கிறது. சமீபத்தில் ஐஸ்வர்யா ராய் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் வெளியாகின. அதன் காரணமாக ஜெயிலர் படத்தில் அவர் நடிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.