ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
நம் நாடு 75வது சுதந்திர தினத்தை விமரிசையாக கொண்டாட தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சமூகவலைதளங்களில் உள்ளவர்கள் ஆக., 2 முதல் தங்களின் முகப்பு போட்டோவாக தேசிய கொடியை வைக்கும் படியும், நாட்டு மக்கள் ஆக., 13 முதல் 15 வரை வீட்டின் முன்பு தேசிய கொடியையும் ஏற்றும்படியும் பிரதமர் மோடி வேண்டுகோள் வைத்தார். தொடர்ந்து பிரதமரும் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மூவர்ணக் கொடியின் படத்தை வைத்தார். அவரைத் தொடர்ந்து அரசியல்வாதிகள் உள்ளிட்ட பல பிரபலங்களும் தங்களின் முகப்பு போட்டோவில் மூவர்ணக் கொடியை வைத்தனர்.
திரைப்பிரபலங்கள் பலரும் அதை தொடர்ந்தனர். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி கலைஞர்களும் தங்களின் சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவை மாற்றினர். ஆனால் தமிழில் செல்வராகவன் உள்ளிட்ட வெகு சிலரே அப்படி செய்தனர்.
இதுதொடர்பாக தமிழ் திரைப்பட கலைஞர்கள் மீது விமர்சனம் எழுந்தது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர் ரஜினிகாந்த் தனது சமூகவலைதளத்தின் முகப்பு போட்டோவில் தேசிய கொடியை வைத்துள்ளார். இதையடுத்து அவரது ரசிகர்களும் இதை தொடர்ந்து வருகின்றனர். திரையுலகினர் சிலரும் மாற்றி உள்ளனர்.