தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் | யு டியுப் சேனல்கள், சமூக வலைத்தளங்கள் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை | கஞ்சா வழக்கு : சிம்பு பட தயாரிப்பாளர் கைது | ராஜமவுலியின் கடவுள் மறுப்புப் பேச்சு : அதிகரிக்கும் சர்ச்சை | கதை என்னவென்று தெரியாமல் தான் எம்புரான் பட சென்சார் பிரச்னையில் உதவினேன் : சுரேஷ்கோபி | தி கேர்ள் ப்ரண்ட் ஹீரோவின் கன்னட பட ரிலீஸ் தேதி ஒரு வாரம் தள்ளி வைப்பு | தள்ளிப்போன மம்முட்டியின் களம்காவல் ரிலீஸ் | மகேஷ்பாபு, ரவீனா டாண்டன் குடும்ப வாரிசுகள் அறிமுகமாகும் படத்தில் இணைந்த ஜிவி பிரகாஷ் | வெப் தொடரான ராஜேஷ்குமார் நாவல் | கிறிஸ்துமஸ் பண்டிகையில் வெளியாகும் 'சர்வம் மாயா' |

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி டாக்டருக்கு படித்துவிட்டு திரையுலகில் நுழைந்துள்ளதுடன் தந்தையைப் போல இயக்குனர் பாதையை தேர்ந்தெடுக்காமல் நடிகையாக மாறியுள்ளார். அதிலும் மாடர்ன் பெண்ணாக அல்லாமல் முதல் படத்திலேயே கிராமத்து பெண்ணாக, இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள விருமன் படத்தின் மூலம் கார்த்திக்கு ஜோடியாக கதாநாயகியாக அறிமுகமாகிறார். இந்த படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்த படத்தில் நடிப்புடன் சேர்த்து யுவன் சங்கர் ராஜா இசையில் ஒரு பாடலையும் பாடி இருக்கிறார் அதிதி. இப்படி முதல் படத்திலிருந்து நடிப்புடன் சேர்த்து பாடகியதாகவும் தன்னை வெளிப்படுத்திக் கொண்டுள்ள அதிதி, தனது திரையுலக பயணத்தில் நடிப்பு, பாடல் இரண்டுக்கும் சம முக்கியத்துவம் கொடுத்து பயணிப்பேன் என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் மம்தா மோகன்தாஸ், ஆண்ட்ரியா, ரம்யா நம்பீசன் இவர்கள் மூவரும் கடந்த 15 வருடங்களாக கதாநாயகியாக நடித்துக்கொண்டே வெற்றிகரமான பாடகியாகவும் வலம் வருகிறார்கள். நயன்தாரா, திரிஷா இரண்டு பேரை தவிர்த்து, பல வருடங்களாக திரையுலகில் நிலைத்து நிற்பதுடன் நடிப்பு, பாடல் என இரண்டிலும் அசத்துவது இந்த மூவர்தான். இந்த மூவரின் ராசி அதிதிக்கும் வொர்க் அவுட் ஆகுமா, திரையுலகில் அவரும் நீண்ட தூரம் பயணிப்பாரா என்பதை போகப்போக பார்க்கலாம்.




