லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத்பாசில் நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‛புஷ்பா'. இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் தயாராகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் படத்தை எடுக்க திரைக்கதையையும் வலுவாக்கி வருகின்றனர். அதோடு இன்னும் சில முக்கிய நடிகர்களையும் நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.
அந்தவகையில் தெலுங்கில் உப்பெனா படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி புஷ்பா படத்தின் முதல்பாகத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகினார். தற்போது இரண்டாம் பாகத்தில் அவர் வில்லனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பருத்திவீரன் பிரியாமணி இந்த படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். இப்படத்தில் அவர் ஒரு வலுவான ரோலில் கிட்டத்தட்ட வில்லி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரியாமணி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.