ரஜினி வெளியிட்ட ‛வித் லவ்' | 100 மில்லியன் பார்வைகளை கடந்த ‛ஊரும் பிளட்' | கமல், ரஜினி இணையும் படம் : 'மகாராஜா' நித்திலன் இயக்குகிறாரா? | 50 ஆண்டுகளுக்குபின் 150வது நாளை கொண்டாடும் படம் எது தெரியுமா? | சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் |

சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'டான்' படம் வியாபார ரீதியில் லாபமான படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'பிரின்ஸ்' படம் அவரது அடுத்த வெளியீடாக அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ளது.
இந்தப் படம் தயாரிப்பில் இருக்கும் போதே கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள அவரது 21 படம் பற்றிய அறிவிப்பும் பொங்கல் தினத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஏழு மாதங்களாகியும் இன்னும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை.
இதனிடையே, சிவகார்த்திகேயனின் மற்றுமொரு படமாக 'மாவீரன்' படத்தின் அறிவிப்பைக் கடந்த மாதம் வெளியிட்டார்கள். ஆனால், சிவகார்த்திகேயனின் எத்தனையாவது படம் என அறிவிக்காமல், சிவகார்த்திகேயயின் அடுத்த படம் என்றே அறிவித்தார்கள். தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பை இன்று(ஆக., 3) முதல் ஆரம்பிக்க உள்ளார்களாம்.
அப்படி என்றால் கமல்ஹாசன் தயாரிப்பில் நடிப்பதாக இருந்த சிவகார்த்திகேயன் 21வது படப்பிடிப்பை தள்ளி வைத்துவிட்டதாகவே தெரிகிறது. ஏற்கெனவே அறிவிப்பு வெளியாகி ஏழு மாதங்களாக படப்பிடிப்பு ஆரம்பமாகவில்லை. அதற்குள் அடுத்த படத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றுவிட்டது திரையுலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.




