ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
'திரையுலகினர் மீது அவதுாறு பரப்பும் வகையில் பேசி வரும் பழம்பெரும் நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதனை கைது செய்ய வேண்டும்' என்ற கோஷம் வலுத்துள்ளது.
தமிழ் திரையுலகில் 1980களில் காமெடி, அடியாள் மற்றும் குணச்சித்திர நடிகராக நடித்தவர் 'பயில்வான்' ரங்கநாதன். சமீப காலமாக திரைத்துறை விமர்சகராக மாறினார். இவர், நடிகர், நடிகையர் குறித்து 'யூடியூப்'களில் வரம்பு மீறி பேசுவது சர்ச்சையை கிளப்பி உள்ளது. சினிமா குறித்த தகவல்களை வழங்கி வந்தவர், நாளடைவில், நடிகர், நடிகையரின் தனிப்பட்ட அந்தரங்க விஷயங்களை ஆபாசமாக பேசத் தொடங்கினார். இதனால், திரைத் துறையில் இவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகை ராதிகா, பின்னணி பாடகி சுசித்ரா, தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்டோர், இவரை வெளிப்படையாக எச்சரித்துள்ளனர். இதில் சுசித்ராவும், கே.ராஜனும் போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்துள்ளனர். 'பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என, சுசித்ரா கூறியுள்ளார்.
சில நாட்கள் அமைதியாக இருந்த ரங்கநாதன், தற்போது பார்த்திபன் இயக்கி நடித்த, 'இரவின் நிழல்' படத்தில் நடித்த நடிகையர் குறித்து, ஆபாசமாக விமர்சித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் திருவான்மியூர் கடற்கரையில் ரங்கநாதனை சந்தித்த, 'இரவின் நிழல்' படத்தில் நடித்த ரேகா நாயர் கண்டபடி திட்டியுள்ளார். இந்நிலையில், 'ரங்கநாதனை கைது செய்து, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சமூக ஆர்வலர்களும் திரைத்துறையினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்கள் கூறியுள்ளதாவது: 'யூ டியூப்' மற்றும் 'டிவி' நிகழ்ச்சிகளில் பேச, அவருக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்.
போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். ரங்கநாதனின் நடவடிக்கையால், பொது மக்கள் மத்தியில் திரைத் துறையினருக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. எவ்வித ஆதாரமுமின்றி, நடிகையரின் தனிப்பட்ட விஷயங்களை வாய்க்கு வந்தபடி பேசுகிறார். அவர் மீது, நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்வது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.