ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்து ஜுன் 3ம் தேதி வெளிவந்த படம் 'விக்ரம்'. இப்படம் வெளிவந்து இன்றுடன் 50 நாட்கள் ஆகிறது. இந்த ஆண்டின் மிகப் பெரிய வெற்றிப் படமாக மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்த படங்களில் மிக அதிகமான லாபத்தை தமிழகத்தில் கொடுத்த படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
ஓடிடி தளத்தில் இப்படம் ஜுலை 8ம் தேதி வெளியாகி அதிலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஓடிடியில் வெளியாகி இரண்டு வாரங்கள் ஆன பிறகும் இன்னமும் தமிழகத்தில் சில தியேட்டர்களில் இப்படம் ஓடிக் கொண்டிருப்பது ஆச்சரியமே. ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் மட்டும்தான் தமிழ் சினிமாவில் 200 கோடிக்கும் மேலான வசூலைப் படைக்கும் நடிகர்கள் என்று இருந்தது. அதை தனது ஒரே படத்தில் மாற்றி அதிக லாபத்தைக் கொடுத்த படங்களில் ஒன்றாக 'விக்ரம்' படம் உருவாகக் காரணமானவர் கமல்ஹாசன். அவரே தயாரித்து, தான் மட்டும் நாயகனாக நடிக்காமல் விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோருக்கும் தகுந்த அளவில் படத்தில் இடமளித்து வெற்றி பெற்றவர்.
கமல்ஹாசன் திரையுலகத்தில் அறிமுகமாகி 60 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இருப்பினும் அவருடைய படங்கள் இந்த அளவில் வசூல் சாதனை பெற்றதில்லை. அவர் நடித்து வெளிவந்த படங்களில் 'விஸ்வரூபம்' படத்தின் இரண்டு பாகங்கள் மட்டுமே 100 கோடி வசூலைத் தாண்டிய படங்களாக அமைந்தன. அதே சமயம், 'விக்ரம்' படம் மற்ற நடிகர்கள் புரியாத சாதனயைப் படைத்துவிட்டது. அந்த சாதனையை அடுத்து எந்த நடிகர் முறியடிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.