லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
மீ டூ புகார்கள் அதிகமாக வெளிவந்த நேரத்தில் இயக்குனர் சுசி கணேசன் மீது இயக்குனர் லீனா மணிமேகலை புகார் அளித்தார். இந்த புகாரால் தனது புகழுக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது என்று கூறி சுசி கணேசன் சைதாப்பேட்டை கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக நடந்து வருகிறது. பலமுறை சம்மன் அனுப்பியும் லீனா மணிமேகலை ஆஜராகவில்லை. வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் உச்சநீதி மன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் வழக்கை 4 மாதத்திற்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று சைதாப்பேட்டை கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. மணிமேகலை இந்த வழக்கில் ஆஜராக மாட்டார். அவர் இந்திய இறையாண்மையையும், சட்டத்தையும் மதிக்காதவர் அதனால் அவர் இல்லாமலேயே இந்த வழக்கை முடிக்க வேண்டும் என்று சுசி கணேசன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கிற்கு முழு ஒத்துழைப்பு கொடுப்பதாக லீனா மணிமேகலை சார்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்ககூடாது என்று சுசிகணேசன் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம் வழக்கை 4 வாரங்களுக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டது.