நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் |
4 வி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் மஞ்சரி சுசி கணேசன் தயாரிக்கும் படம் வஞ்சம் தீர்த்தாயடா. சுசி கணேசன் இயக்குகிறார். இளையராஜா இசை அமைக்கிறார். இந்த படத்தில் ஒரு முன்னணி ஹீரோவும், ஒரு புதுமுகமும் நடிக்க இருக்கிறார்கள். அந்த புதுமுக ஹீரோவை வருங்கால சூப்பர் ஸ்டார் 2022 என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் தேர்வு செய்ய இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: பலருக்கும் நடிக்கும் ஆசை திறமை இருந்தும் பலர் பல்வேறு காரணங்களால் நடிப்பு கனவை ஒத்திவைத்து வேறு பாதையில் பயணப்பட்டு இருப்பார்கள் . சூப்பர் ஸ்டார் ஆகும் தகுதியுள்ள ஒரு அற்புதமான நடிகரை கண்டெடுப்பதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். தேர்வாகும் போட்டியாளர்கள் சென்னையில் தங்க வைக்கப்பட்டு நடிப்புப் பயிற்சி, உடற்பயிற்சி அளிக்கப்படும் . மூன்றாவது சுற்றுக்கு தேர்ந்தெடுக்கும் போட்டியாளர் 12 போட்டியாளர்களில் ஒருவர் படத்தின் ஹீரோவாக தேர்ந்தெடுக்கப்படுவார். என்றார்.