ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கனடா நாட்டில் வாழும் விஜய் ரசிகர்கள் இணைந்து விஜய்க்காக இசை ஆல்பம் ஒன்றை உருவாக்கி உள்ளனர். இந்த ஆல்பத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் பரத்வாஜ் இசை அமைத்துள்ளார்.
தீ தீ தளபதி என தொடங்கும் பாடலின் பாடல் வரிகளை கனடா விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவர் கார்த்திக் எழுதி, ஜனனியுடன் பாடி உள்ளார். கனடாவின் டொரோண்டாவில் உள்ள எக்ஸோடஸ் ஸ்டூடியோவில் இதனை உருவாக்கி உள்ளனர். யூடியூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
"இந்த பாடல், நிச்சயம் அனைத்து ரசிகர்களுக்கும் பிடித்தமானதாகவும் உற்சாகமானதாகவும் இருக்கும். அனைத்து நாடுகளிலுள்ள அவரின் ரசிகர்களிடையேயும் இந்த பாடல் ஒரு புத்துணர்வையும்,பரவசத்தையும் ஏற்படுத்தும். அஜித் படங்களுக்குதான் பரத்வாஜ் அதிக அளவில் இசை அமைத்துள்ளார். விஜய் படங்களுக்கு அவர் இசை அமைத்தில்லை. அதனால் அவரை இசை அமைக்க கேட்டுக் கொண்டோம். அவரும் மகிழ்ச்சியோடு இசை அமைத்துக் கொடுத்தார்" என்கிறார் கனடா விஜய் ரசிகர் மன்ற துணை செயலாளர் பாலாஜி பெருமாள்.