100 கோடி வசூலைக் கடந்த 'ஹரிஹர வீரமல்லு' | 'சாயரா' இந்தியாவில் நிகர வசூல் 250 கோடி | 'அவதார் - பயர் அண்ட் ஆஷ்' டிரைலர் ரிலீஸ் | ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் |
தமிழ் சினிமாவில் ஒரு சில இயக்குனர்கள் மட்டுமே நேர்மையான படைப்புகளைக் கொடுக்க வேண்டும் என நினைத்து செயல்படுகிறார்கள். அவர்களைப் போலவே சில நடிகர்களும் இருக்கிறார்கள். மற்றவர்கள் தங்களது இமேஜ் தான் முக்கியம், வசூல் தான் முக்கியம் என்ற நினைப்புடனேயே இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணியில் உள்ள நடிகர்களில் ரஜினிகாந்த் 70 வயதைக் கடந்தவர். கமல்ஹாசன் 70 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். அஜித் 50 வயதைக் கடந்தவர், விஜய் 50 வயதை நெருங்கிக் கொண்டிருப்பவர். இவர்கள் அனைவருமே தங்கள் வயதை விட பாதி வயது குறைந்தவர்களுடன்தான் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசைப்படுகிறார்கள்.
ஒரு காலத்தில் 50 வயது ஹீரோக்கள் கல்லூரி மாணவர்களாக நடித்ததைப் போலத்தான் இதுவும் பொருத்தமற்ற ஒரு விஷயம். திரையிலேயே இவர்களது வயது தெரிந்துவிடுகிறது. அப்படியிருக்கும் போது மிகவும் வயது குறைந்த நாயகிகளுடன் ஜோடி சேர்ந்து திரையில் நடனமாடும் போது சிரிப்புத்தான் வருகிறது. அதிலும் காதல் காட்சிகள் என்றால் சொல்லவே வேண்டாம்.
கடந்த இரண்டு நாட்களாக விக்ரம் ஜோடியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விக்ரமிற்கு வயது 56, ராஷ்மிகாவுக்கு வயது 26. இருவரது ஜோடிப் பொருத்தத்தை நினைத்தாலே சிரிப்புதான் வருகிறது. விக்ரம் ஆஜானுபாகுவான தோற்றம் கொண்டவர். ராஷ்மிகா சிறிய உருவம் கொண்டவர். விக்ரம், ராஷ்மிகா இருவரையும் திரையில் ஒன்றாகப் பார்த்தால் யானை பக்கத்தில் மான் இருப்பதைப் போலத்தான் இருக்கும்.
தமிழ் சினிமாவை சில இளம் இயக்குனர்கள் வேறொரு பாதையில் முன்னெடுத்து வருகிறார்கள். அவர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். அவர் இதையெல்லாம் யோசிக்க மாட்டாரா என்ன ?.