ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முப்தி' படத்தின் தமிழ் ரீமேக் தான் பத்து தல. இப்படத்தை 'சில்லுனு ஒரு காதல்' படத்தின் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கி வருகிறார். இதில் சிம்புடன் இணைந்து கவுதம் கார்த்திக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.
சமீபத்தில் சிலம்பரசனின் தந்தை டி.ராஜேந்தர் உடல் நலக்குறைவால் மேல் சிகிச்சைக்காக அமெரிக்க அழைத்து செல்லப்பட்டார். சிம்புவும் அவர் உடன் சென்று அருகில் இருந்து அவரை கவனித்துக் கொண்டார். தற்போது அவருக்கு சிகிச்சை முடிந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு சிம்பு சென்னை திரும்பினார்.
இந்நிலையில் சிம்பு தற்போது பத்து தல படத்தின் படப்பிடிப்பில் மீண்டும் இணைந்துள்ளார். இயக்குனர் கிருஷ்ணா உடனான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். "பத்து தல படத்தின் படப்பிடிப்பிற்காக தயாராகி விட்டோம். டி. ராஜேந்தர் குணமடைந்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று தெரிவித்துள்ளார்.




