ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
கன்னட மொழியில் தயாராகி இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு பான் இந்திய படமாக வெளியானது சார்லி 777 படம். வளர்ப்பு நாயை மையமாக கொண்டு விலங்குகள் மீதான மனிதனின் அத்துமீறல்களை சொன்ன படம்.
இதை கிரண்ராஜ்.கே என்பவர் எழுதி இயக்கியிருந்தார். பரம்வா ஸ்டுடியோஸ் தயாரிப்பில் உருவான இதில் முக்கிய காதாபாத்திரத்தில் சார்லி என்ற லாப்ரடோர் நாய், ரக்ஷித் ஷெட்டி, சங்கீதா சிருங்கேரி , ராஜ் பி. ஷெட்டி , டேனிஷ் சைட் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் நடித்திருந்தனர்.
தமிழ் தவிர மற்ற மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற இந்தப் படம் சிறப்பான வசூல் செய்தது. தற்போது 25 வது நாளை கொண்டாடுகிறார்கள். இதையொட்டி படத்தின் ஹீரோவும், தயாரிப்பாளர்களில் ஒருவருமான ரக்ஷித் ஷெட்டி அதிரடியாக சில காரியங்களை செய்திருக்கிறார். தெரு நாய்களை பராமரிக்கும் தொண்டு நிறுவனங்களுக்கு படத்தின் லாபத்தில் இருந்து 5 சதவீதமும், படத்தில் பணியாற்றிய 100 தொழிலாளர்களுக்கு 10 சதவீதமும் வழங்கி உள்ளார்.