ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
சின்னத்திரை வட்டாரத்தில் பழைய ஜோக் தங்கதுரை என்று அழைக்கப்படும் தங்கதுரை கலக்கப்போவது யாரு? நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றார். இதை தொடர்ந்து தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். ஏ1, எதற்கும் துணிந்தவன், சார்பட்டா பரம்பரை, செல்பி, பிளான் பண்ணி பண்ணனும் போன்ற படங்களில் காமெடியனாக நடித்த தங்கதுரை நேற்று வெளியான பன்னிகுட்டி படத்தின் மூலம் முழுநீள காமெடியன் ஆகியிருக்கிறார்.
அடுத்து வடிவேலுவுடன் நாய்சேகர், ராகவா லாரன்சுடன் ருத்ரன், பிரபு தேவாவுடன் ஜல்சா, ஹரீஷ் கல்யாணுடன் டீசல், சன்னி லியோனுடன் ஓ மை காட், அர்ஜூனுடன் தீயவன் குலை நடுங்க, ஆதி-ஹன்சிகாவுடன் பாட்னர், பாபி சிம்ஹாவுடன் தடை உடை, வெற்றியுடன் பம்பர் உள்பட பல படங்களில் நடித்து வருகிறார்.