'3 பிஎச்கே' முதல் 'தம்முடு' வரை: இந்த வார ஓடிடி ரிலீஸ் என்னென்ன? | ரிஷப் ஷெட்டியின் புதிய படத்தின் அப்டேட்! | சென்னை கல்லூரி சாலை நடிகர் ஜெய்சங்கர் சாலை ஆகிறது | மீண்டும் இணையும் பாண்டிராஜ், விஜய் சேதுபதி கூட்டணி! | சரியான நேரம் அமையும் போது சூர்யாவை வைத்து படம் இயக்குவேன் -லோகேஷ் கனகராஜ்! | புதுமுக இயக்குனரை ஆச்சரியப்படுத்திய விஜய்! - இயக்குனர் பாபு விஜய் | விஜய் உட்கட்சி பிரச்னை: உதயாவின் 'அக்யூஸ்ட்' படத்தில் இடம் பெறுகிறதா? | போகியை புறக்கணித்தார் சுவாசிகா: பழசை மறப்பது சரியா? | ஒரே படத்தில் இரண்டு புதுமுகங்கள் அறிமுகம் | துல்கர் இருப்பதால் நான் தனிமையை உணரவில்லை: கல்யாணி |
திமுக இளைஞர் அணி செயலாளராகவும், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ ஆகவும் இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு உதயநிதி நடிக்கும் படங்கள் அவரது இமேஜை உயர்த்தும் அளவிற்கு இருக்க வேண்டும் என திட்டமிட்டு உருவாக்கி வருகிறார்கள்.
அந்த விதத்தில் அவர் நடித்து 'நெஞ்சுக்கு நீதி' படம் வெளிவந்தது. இதற்கடுத்து அவர் நடித்து வர உள்ள படத்திற்கு 'கழகத் தலைவன்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 'தடையறத் தாக்க, மீகாமன், தடம்' ஆகிய படங்களை இயக்கிய மகிழ்திருமேனி இப்படத்தை இயக்கியுள்ளார். 'ஈஸ்வரன், பூமி' படங்களில் கதாநாயகியாக நடித்த நிதி அகர்வால் கதாநாயகியாக நடித்துள்ளார்.
பொருளாதாரக் குற்றங்களை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை எழுதப்பட்டுள்ளதாம். அதைச் சுற்றி நடக்கும் அரசியல் விஷயங்களும் படத்தில் உண்டாம். இப்படத்தின் படப்பிடிப்பு எப்போதோ முடிந்தாலும் இறுதிக் கட்டப்பணிகளை இயக்குனர் மகிழ் திருமேனி பொறுமையாக இழைத்து வருகிறாராம். விரைவில் படத்தின் முதல் பார்வை வெளியாகும் எனத் தெரிகிறது.