100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
தமிழின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது பாலா இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடைபெற்று முடிந்து தற்போது இடைவெளி விட்டுள்ளார்கள். அடுத்த மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
இந்தப் படத்தை முடித்த பிறகு சூர்யா, இயக்குனர் சிவா இயக்க உள்ள படத்தில் நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. வெற்றி மாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள 'வாடி வாசல்' படத்தின் படப்பிடிப்பு மேலும் தள்ளிப் போகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வெற்றிமாறன் சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் 'விடுதலை' படத்தின் கடைசி கட்டப் படப்பிடிப்பில் உள்ளார். அந்தப் படத்தின் பணிகளை முழுவதுமாக முடித்து படத்தை வெளியிட்ட பின்தான் 'வாடி வாசல்' வேலைகளை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.
அதற்குள்ளாக சூர்யா, சிவா படம் நடந்து முடிந்துவிடுமாம். இந்தப் படத்தை முழு நீள கமர்ஷியல் ஆக்ஷன் படமாக எடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஏற்கெனவே, இந்தக் கூட்டணி மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இணைவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்தை ஆரம்பிக்கவேயில்லை. இப்போது தயாரிப்பாளர் மாறுவாரா அல்லது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமே மீண்டும் தயாரிக்குமா என்பது விரைவில் தெரிய வரும்.