சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், தேவயானி, ராதிகா மற்றும் பலர் நடித்து கடந்த 1997ம் வருடம் இதே நாளில் வெளிவந்த படம் 'சூர்ய வம்சம்'. தமிழ் சினிமாவின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்றான இந்தப் படம் வந்து இன்றுடன் 25 ஆண்டுகள் நிறைவடைகிறது. இது குறித்து படத்தின் கதாநாயகனாக சரத்குமார் தன்னுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.
“ஆர்பி சௌத்ரி தயாரிப்பில், விக்ரமன் இயக்கத்தில் சூப்பர் ஹிட் படமான 'சூர்ய வம்சம்' படத்தில் நடித்த அந்த நாட்கள் மறக்க முடியாதவை. ஒரு அற்புதமான பிளாக்பஸ்டர் திரைப்படம். இதுவரையில் தியேட்டர்களில் அதிக எண்ணிக்கை மக்கள் பார்த்த சாதனையை இன்று வரை வைத்திருப்பதும், ஒரு வருடம் வரை படம் ஓடியதும் சாதாரண விஷயமல்ல. ரசிகர்கள், நலம் விரும்பிகள், படத்தைப் பார்த்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவுக்கு என்றென்றும் நன்றி, அதை எப்போதும் மறக்க மாட்டேன். அது போன்று ஒரு சூப்பர் ஹிட் படத்தை மீண்டும் கொடுக்கும் வகையில் கடினமாக உழைப்பேன்,” என சரத்குமார் பதிவிட்டுள்ளார்.