தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் |
இந்தியத் திரையுலகத்தில் ஆயிரம் படங்களுக்கு மேல் இசையமைத்து, பல மொழிகளில் பல சூப்பர் ஹிட் பாடல்கள், படங்களைக் கொடுத்தவர் இசையமைப்பாளர் இளையராஜா. கடந்த சில வருடங்களாக குறைவான படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
அவரது இசையில் ஒரு காலத்தில் ஒரே நாளில் பல படங்கள் வெளிவந்து, அவை அனைத்தும் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு. அவரைப் போல இனி, தமிழ் சினிமாவில், ஏன் இந்திய சினிமாவில் இசையமைக்க யாராவது வருவார்களா என்பது சந்தேகம் தான்.
கடந்த வாரம் ஜுன் 24ம் தேதி ஒரே நாளில் இளையராஜாவின் இசையில் இரண்டு படங்கள் வெளிவந்துள்ளன. ஒரு படம் 'மாயோன்', மற்றொன்று 'மாமனிதன்'. இதில் 'மாமனிதன்' படத்தில் தனது மகன் யுவன்ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து இசையமைத்துள்ளார்.
இளையராஜா இசையில் கடைசியாக 2016ம் ஆண்டு ஜுலை 1ம் தேதி 'அப்பா, ஒரு மெல்லிய கோடு' ஆகிய படங்கள் ஒரே நாளில் வெளிவந்துள்ளன. அதற்கடுத்து ஆறு வருடங்களுக்குப் பிறகு கடந்த வாரம்தான் ஒரே நாளில் இரண்டு படங்கள் வெளியாகி உள்ளன.
இளையராஜா தற்போது பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.