'காந்தாரா' பார்க்கும் முன் அசைவம் சாப்பிடக்கூடாதா?: ரிஷப் ஷெட்டி விளக்கம் | சக்திமான் கதைக்காக 2 வருடத்தை வீணாக்கிய பஷில் ஜோசப் | மேலாளார் தாக்கப்பட்ட வழக்கு : நேரில் ஆஜராக உன்னி முகுந்தனுக்கு நீதிமன்றம் சம்மன் | 'ஓஜி' புரமோஷன் நிகழ்ச்சியில் பவன் கல்யாணின் வாள்வீச்சில் இருந்து மயிரிழையில் தப்பிய பாதுகாவலர் | தாதா சாஹேப் பால்கேவுக்கு மோகன்லால் விருது வழங்கப்பட வேண்டும் : ராம் கோபால் வர்மா | மோடியாக நடிக்கும் உன்னி முந்தனுக்கு உடனடியாக ஹிந்தியில் ஒப்பந்தமான இரண்டு படங்கள் | ஆயிரம் கோடி டார்கெட்டில் காந்தாரா | தமிழில் வெளியாகும் புதிய அனகோண்டா | டைரக்டரை அண்ணா என அழைத்த ப்ரீத்தி அஸ்ராணி | அசுரனாக நடிக்கும் எஸ்.ஜே.சூர்யா |
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13-ஆம் தேதி வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் 'டான்'. அறிமுக இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இப்படத்தை இயக்கியுள்ளார் . இந்த படத்தில் பிரியங்கா அருள்மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி ஆகியோர் நடித்திருந்தனர் . ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பை பெற்றுவந்த இந்த படத்தை ரஜினிகாந்த் உள்ளிட்ட பல பிரபலங்கள் பாராட்டியுள்ளார் .
இந்நிலையில் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், சிவகார்த்திகேயனை பாராட்டியுள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த டான் திரைப்படம் பார்த்தேன். “பெற்றோரை அவர்கள் இருக்கும் போதே கொண்டாடுங்கள் என்ற பாடத்தை சொல்லும் அந்த திரைப்படம் அனைவராலும் பார்க்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு நடிகர் சிவகார்த்திகேயன் நன்றி தெரிவித்துள்ளார்.