இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
நடிகர் சூரி ஒரு பக்கம் நகைச்சுவை நடிகர், கதையின் நாயகன் என தற்போது பழையபடி பிசியான திரையுலக வாழ்க்கைக்குள் மீண்டும் அடியெடுத்து வைத்துள்ளார். இந்த நிலையில் சோசியல் மீடியாவில் வெளியான சூரியின் புகைப்படமும் அதன் கீழே குறிப்பிடப்பட்டிருந்த செய்தியும் சூரியை மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
அதாவது மதுரையில் விரைவில் நடைபெற உள்ள நிகழ்ச்சி ஒன்றில் சூரி நடத்தி வரும் அறக்கட்டளை சார்பாக மேல்படிப்பு படிக்க விரும்பும் அனைவருக்கும் அவர்களுக்கான கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பது போன்ற விளம்பரம் ஒன்று உருவாக்கப்பட்டு, அதில் சூரியின் படமும் இடம் பெற்றிருந்தது.
இதைப்பார்த்து அதிர்ந்து போன சூரி, “இப்படி என் பெயரில் வெளியாகியுள்ள விளம்பரம் ஒரு ஏமாற்று வேலை.. இந்த புகைப்படம் ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டபோது எடுக்கப்பட்ட புகைப்படம்.. அதை வைத்து இப்படி போலியான ஒரு விளம்பரத்தை கொடுத்து அதன்மூலம் பணம் சம்பாதிக்கும் உள்நோக்கத்துடன் யாரோ சிலர் செயல்பட்டிருக்கிறார்கள்.. இதுபோன்ற இனி அவர்கள் செயல்படக்கூடாது.. மேலும் இது தொடர்ந்தால் அவர்கள் மீது காவல் துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் கூறியுள்ளார் சூரி.
மேலும் கல்வி போன்ற விஷயங்களுக்கு என்னுடைய உதவிகள் எப்போதும் சத்தம் இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.. ஆனால் அதை இப்படி வெளிப்படையாக விளம்பரம் போட்டு செய்ய வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் கூறியுள்ளார் சூரி.