நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் |
இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் தனது முதல் சுயாதீன (இண்டிபெண்டென்ட்) ஜாஸ் ஆல்பமான 'குரோமாடிக் கிராமாடிக்' மூலம் உலக அரங்கில் முத்திரை பதிக்கவுள்ளார். லிடியனின் இசையமைப்பில் உலகெங்கிலும் உள்ள முன்னணி இசைக்கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பணியாற்றியுள்ளனர்.
மொத்தம் 12 பாடல்கள் கொண்ட இந்த ஆல்பம் குறித்து லிடியன் கூறுகையில், ‛உலக இசை அரங்கில் ஜாஸ் இசை படைப்புகள் வெகுவாக குறைந்து வருகின்றன. இந்தியாவில் ஜாஸ் இசைக்கலைஞர்கள் மிகக் குறைவு. இந்த முயற்சி ஜாஸ் இசைக்கு புத்துயிர் தரும் என்று நம்புகிறேன். உலக இசை தினத்தை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி வெளியீட்டு விழா நடைபெறுகிறது. இந்த ஆல்பம் சர்வதேச தளங்களிலும் கிடைக்கும். பல்வேறு விருது விழாக்களுக்கு சமர்ப்பிக்கப்படும்,' என்றார்.