ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
இளம் வயதில் வேகமாக இசையமைத்து சாதனை படைத்தவர் லிடியன் நாதஸ்வரம். தற்போது மலையாளத்தில் மோகன்லாலின் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் இசை நுணுக்கங்களை பயின்று வருகிறார். இளையராஜாவின் இசை ஸ்டுடியோவில் இசை தொடர்பான விஷயங்களை அவரிடம் கற்று வருகிறார் லிடியன்.
இதுப்பற்றி லிடியன் கூறுகையில், ‛‛இசைஞானி இளையராஜா தான் என் இசை ஆசிரியர். மிகவும் அன்புடனும் அக்கறையுடனும் எனக்கு தினமும் இசையை கற்றுக் கொடுக்கிறார். அவருடைய முதல் மற்றும் ஒரே மாணவன் நான் தான் என்று இளையராஜா தன்னிடம் கூறியதாக மகிழ்ச்சி உடன் தெரிவித்துள்ளார். அதோடு இளையராஜாவிடம் பாடம் படிக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.