ஹைதராபாத்தில் அனிருத் நடத்தும் 'கூலி' இசை நிகழ்ச்சி! | ரியல் பிரபாஸூடன் நடித்த நிதி அகர்வால்! | ஜீவாவின் 46வது படத்தை இயக்கும் கே.ஜி.பாலசுப்பிரமணி! | ஆகஸ்ட் 29ல் தனது பிறந்த நாளில் குட் நியூஸ் வெளியிடும் நடிகர் விஷால்! | கமலின் 237வது படத்தில் நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன்! | நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரைக்கு வரும் அதர்வாவின் தணல்! | நாளை ரீரிலீஸ் ஆகும் பாட்ஷா படம்! | இயக்குனர் வேலு பிரபாகரன் காலமானார் | ஓடிடியில் இந்த வாரம் ரிலீஸ் என்ன...? : ஒரு பார்வை! | போலீசார் மீதான மரியாதை அதிகரித்துள்ளது : திரிதா சவுத்ரி |
எனிமி படத்தை எடுத்து து.பா.சரவணன் இயக்கத்தில் விஷால் தயாரித்து, நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் படம் ஜனவரி 26ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பதால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டிஜிட்டல் ரைட்ஸை ஜீ தொலைக் காட்சி ரூ . 17 கோடிக்கு வாங்கி இருக்கிறது. அதோடு ஹிந்தி டிஜிட்டல் மற்றும் டப்பிங் ரைட்ஸை ஒன்பது கோடிக்கு வாங்கி உள்ளார்கள். இதன் காரணமாக வீரமே வாகை சூடும் படம் சுமார் 36 கோடிக்கு மேல் வசூல் ஆகியுள்ளது. இது தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் உரிமைகள் வழியாக மேலும் பல கோடிகள் இந்தப் படத்துக்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. அதோடு படத்தின் தமிழக திரையரங்கு உரிமை பத்தரை கோடி ரூபாய்க்கு விற்பனையாகி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் விஷாலின் வீரமே வாகை சூடும் படம் திரைக்கு வருவதற்கு முன்பே லாபத்தை சம்பாதித்துக் கொடுத்திருக்கிறது.