பாலா நடித்த காந்திகண்ணாடி படம்: ம.கா.பா ஆனந்த், பிரியங்கா சொன்னது என்ன? | 50 ஆண்டு கொத்தடிமை,, தஞ்சை பின்னணியில் நடக்கும் கதை | மதராஸியை நம்பியிருக்கும் முருகதாஸ் | நடிப்பில் ஆர்வம் காண்பிக்கும் மிஷ்கின் | குருநாதர் பாக்யராஜ் சொன்ன அட்வைஸ்: சிஷ்யன் பாண்டியராஜன் நெகிழ்ச்சி | பிளாஷ்பேக்: ஜேம்ஸ்பாண்ட் நடிகராக ஜெய்சங்கர் ஜெயித்துக் காட்டிய “வல்லவன் ஒருவன்” | நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! |
நெல்சன் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ள விஜய், அடுத்தபடியாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கும் தனது 66வது படத்தில் நடிக்கப் போகிறார். தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகும் இந்தப் படத்தை தில் ராஜு தயாரிக்கிறார். இந்த படத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் மகள் விஜய்யின் மகளாக நடிக்கப் போகிறார் என்ற தகவல் ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் தயாரிப்பாளர் தில் ராஜு, விஜய் 66வது படம் குறித்து ஒரு தகவல் வெளியிட்டுள்ளார். அதில், இயக்குனர் வம்சி கூறிய கதை எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. அதையடுத்து விஜய் இந்த கதையை கேட்ட பிறகு இதே போன்ற ஒரு கதையை நான் கேட்டு 20 வருடங்கள் ஆகிவிட்டது என்று ஒரு உற்சாகமான பதில் கொடுத்தார். ஒரு மிகப் பெரிய நடிகரே இப்படி கூறியதை கேட்டு எனக்கு இந்த படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கை ஏற்பட்டது. அதோடு ஏற்கனவே நான் நடித்து வெளியான பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை படங்களைப் போன்று இதுவும் ஒரு நல்ல குடும்பப் பாங்கான கதையாக உள்ளது என்று விஜய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார் என்று கூறியுள்ளார் தில் ராஜு.
விஜய் 66 ஆவது படத்தை மார்ச் மாதத்தில் தொடங்கி இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஒருவேளை கொரோனா காரணங்களால் படப்பிடிப்பு தாமதம் ஆனால் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார் .