ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
ஆர்ஜே பாலாஜி, சரவணன் இயக்கத்தில், ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி, சத்யராஜ், ஊர்வசி மற்றும் பலர் நடிக்கும் படம் 'வீட்ல விசேஷம்'. இப்படம் இந்த வாரம் ஜுன் 17ம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்திற்காக பல விதமான பிரமோஷன்களை படக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
இதற்கு முன்பு தங்களுடைய வீட்டில் விசேஷ நிகழ்ச்சிகளை நடத்திய சிலரது வீட்டிற்கு திடீரெனச் சென்று சர்ப்ரைஸ் அளித்தார் பாலாஜி. அடுத்து படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் அனைவரையும் வந்து கலந்து கொள்ள அழைத்தார். நள்ளிரவு வரை ரசிகர்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டார். படம் வெளியாகும் தியேட்டர்களில் சீமந்தம் செட் ஒன்றையும் அமைத்துள்ளார்கள்.
அடுத்து இப்படத்தின் புரமோஷனுக்காக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் 'புதுப்புது அர்த்தங்கள்' தொடரில் ஆர்ஜே பாலாஜி, அபர்ணா பாலமுரளி சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். அத்தொடரில் நடிகை தேவயானி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அவருடன் பாலாஜி, அபர்ணா நடித்துள்ள காட்சிகள் இந்த வாரம் ஒளிபரப்பாகிறது. ஒரு படத்தின் பிரமோஷனுக்காக அதன் நாயகன், நாயகி டிவி தொடரில் நடிப்பது, உலகத் தொலைக்காட்சி வரலாற்றில் இதுவே முதல் முறை.