சிவகார்த்திகேயன் வளர்ச்சி எப்படி : கீர்த்தி சுரேஷ் சொன்ன பதில் | மாஸ்க் பட ரிசல்ட் நிலவரம் : ஆண்ட்ரியா வீட்டு நிலைமை? | அனைத்து மதங்களின் ரசிகன் நான் : ஏஆர் ரஹ்மான் | பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு |

சிறு வயதில் பள்ளியில் படித்து கொண்டிருந்தபோதே, சினிமாவில் கதாநாயகியாக நடிக்க வந்தவர், லட்சுமிமேனன். இவர் தமிழில் 'சுந்தரபாண்டியன்' படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனார். கும்கி, குட்டிப்புலி, பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன், மஞ்சப்பை, ஜிகர்தண்டா, வேதாளம், மிருதன், ரெக்க உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.
சில ஆண்டுக்கு பின் அவர் நடிப்பதை நிறுத்திவிட்டு, தனது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். மீண்டும் 5 வருடங்களுக்கு பிறகு விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'புலிக்குத்தி பாண்டி' என்ற படத்தில் நடித்தார். தற்போது 'சிப்பாய்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் லட்சுமி மேனன் ஒரு வீடியோ பதிவை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதில், 'தனக்கு தொப்பை வந்துவிட்டது', என்றும் தெரிவித்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது .




