பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

கமல்ஹாசன் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'விக்ரம்'. இப்படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் பெற்றுள்ளது. இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில், நரேன், காயத்ரி ஆகியோர் நடித்திருந்தனர். சூர்யா சிறப்பு தோற்றத்தில் மிரட்டி இருந்தார். இந்த படத்தின் வெற்றியை முன்னிட்டு கமல்ஹாசனை சந்தித்து முக்கிய நட்சத்திரங்கள் பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் அருண் விஜய், இயக்குனர் ஹரி மற்றும் யானை படக்குழுவினர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துளள்னர். இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. அருண் மற்றும் ஹரி கூட்டணியில் 'யானை' திரைப்படம் உருவாகியுள்ளது.




