பிளாஷ்பேக்: விக்ரம் முதல் காட்சி வசூலை குழந்தைகளுக்கு கொடுத்த கமல் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே எழுந்த பாடல் சர்ச்சை | ஹீரோவான யு டியூபர் | 4 வருடங்களுக்கு பிறகு வெளியானது 'பேமிலி மேன் 3' | 8 மணி நேர வேலை: ஓங்கி ஒலிக்கும் நடிகைகளின் குரல் | சர்வதேச திரைப்பட விழாவில் 'அமரன்' டீம் | டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் |

தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாராவுக்குக் கடந்த வாரம் சென்னையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா சினிமாவில் நடிக்கப் போகிறார். ஆனாலும், அவர் புது கண்டிஷன்களைப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பெரும்பாலும் தெலுங்கு ஊடகங்கள்தான் குறிப்பிட்டு எழுதியுள்ளன.
திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா இன்னும் எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அதற்குள் எப்படி, இப்படி ஒரு புதிய நிபந்தனை போட்டுள்ளார் என்று எழுதுகிறார்கள் எனத் தெரியவில்லை என தமிழ்த் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.
கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன், தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கால்ஷீட் தர மாட்டேன் ஆகியவைதான் நயன்தாரா விதித்துள்ள புதிய நிபந்தனைகள் என்கிறார்கள். நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் 'ஜவான்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. ஹிந்திப் படங்களில் காதல் காட்சிகள் பொதுவாகவே நெருக்கமாகத்தான் இருக்கும். அப்படியிருக்க திருமணத்திற்குப் பிறகு அப்படி நடிக்க மாட்டேன் என நயன்தாரா எப்படி சொல்லியிருப்பார் என்றும் திரையுலகில் கேள்வி எழுப்புகிறார்கள்.




