மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து வாழ்த்து பெற்ற அமரன் படக்குழுவினர் | எனக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் - ராஷி கண்ணா | சூர்யா 45 படத்தில் ‛லப்பர் பந்து' நடிகை | சிவராஜ் குமாருக்கு பதிலாக விஷால் | விஜய் மகன் இயக்கும் படத்தில் சந்தீப் கிஷன் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | 27 ஆண்டுகளுக்கு முந்தைய ஹாலிவுட் படத்தின் ரீமேக்கா விடாமுயற்சி? | 20வது பிறந்தநாளை எளிமையாக கொண்டாடிய அனிகா சுரேந்திரன் | தந்தை மறைவு : சமந்தா உருக்கமான பதிவு | கர்மா உங்களை விடாது : நயன்தாரா பதிவு யாருக்கு? | திரிஷா நடித்துள்ள மலையாள படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெற்றிப் படங்களைக் கொடுப்பது இந்தக் காலத்தில் சாதாரண விஷயமல்ல. அப்படி நான்கு படங்களை வெற்றிப் படங்களாகக் கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளவர் லோகேஷ் கனகராஜ்.
கமல்ஹாசன் நடிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'விக்ரம்' படம் கடந்த வாரம் வெளிவந்து நல்ல வரவேற்பையும், பெரிய வெற்றியையும் பெற்றுள்ளது. ரஜினிகாந்த் நாயகனாக நடிக்க கமல்ஹாசன் தயாரிக்க லோகேஷ் கனகராஜ் இயக்கத்தான் ஒரு படம் முன்னர் முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், சில காரணங்களால் அந்தப் படம் நடக்கவில்லை. அதன் பிறகுதான் கமல்ஹாசனே கதாநாயகனாக நடிக்க லோகேஷ் இயக்க 'விக்ரம்' படத்தை ஆரம்பித்தனர்.
முன்னர் முடிவு செய்யப்பட்டு கைவிடப்பட்ட ரஜினிகாந்த் - கமல்ஹாசன் - லோகேஷ் கனகராஜ் நடிக்கும் படம் மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என ஒரு தகவல் பரவி வருகிறது. சமீபத்தில் கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் ரஜினிகாந்தை சந்தித்துப் பேசினர். அதன்பின் 'விக்ரம்' படத்தை வெகுவாகப் பாராட்டினார் ரஜினி என்ற செய்திகளும் வெளிவந்தன.
ரஜினிகாந்த் - லோகேஷ் இணைந்து ஒரு படம் செய்ய மாட்டார்களா என்று ரஜினிகாந்த் ரசிகர்களும் எதிர்பார்த்தனர். அது நடக்கும் என்றே தெரிகிறது. விஜய் நடிக்கும் படத்தை இயக்கி முடித்த பின் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவார் எனத் தெரிகிறது. அதன் பிறகுதான் 'கைதி 2' படத்தை இயக்குவார் என்றும் சொல்கிறார்கள்.
நெல்சன் இயக்கத்தில் தனது 169வது படத்தை ரஜினிகாந்த் முடித்த பின் அவரது 170வது படமாக லோகேஷ் இயக்கும் படம் உருவாகலாம். அதற்குள் விஜய்யின் 67வது படத்தை லோகேஷும் இயக்கி முடித்துவிட்டு வந்துவிடுவாராம்.