திறமையை மட்டும் பாருங்க : மாளவிகா மோகனன் கோபம் | 'முத்து என்கிற காட்டான்' : விஜய் சேதுபதி, மணிகண்டன் வெப்தொடரின் தலைப்பு | மாவீரன் இரண்டாம் பாகத்தில் நடிக்க விரும்பும் சிவகார்த்திகேயன் | தாய்லாந்தில் ரஜினி செய்த செயல் : ஐதராபாத்தில் வியந்து பேசிய நாகர்ஜூனா | கணவர் உடனான போட்டோக்கள் நீக்கம் : விவாகரத்து முடிவில் ஹன்சிகா? | பிரபாஸின் ‛தி ராஜா சாப்' மீண்டும் தள்ளிப் போகிறதா? | மலையாள இயக்குனர் படத்தில் நடிக்கப்போகும் சல்மான்கான் | மணிரத்னம் இயக்கத்தில் துருவ் விக்ரம், ருக்மணி வசந்த் | சினிமாவில் தொடர் தோல்வியில் சிரஞ்சீவி குடும்பம் | 'மழை பிடிக்காத மனிதன்' : மீண்டும் புகார் சொல்லும் விஜய் மில்டன் |
கஸ்தூரிராஜா இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக அறிமுகமான 'துள்ளுவதோ இளமை' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷெரின். அதன்பின் 'ஸ்டூடன்ட் நம்பர் 1, விசில், கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம்,' ஆகிய படங்களில் நடித்தார். அறிமுகமான இருபது வருடங்களில் எத்தனையோ படங்களில் நடித்திருக்கலாம். அறிமுகப் படத்தில் கிடைத்த புகழை தக்க வைத்துக் கொள்ளாமல் தவறிவிட்ட நடிகைகளில் ஒருவர் ஷெரின்.
பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு மீண்டும் புகழின் வெளிச்சத்திற்கு வந்தவர். இருப்பினும் அதன்பிறகும் அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. தனது சமூக வலைத்தளங்களில் அடிக்கடி கிளாமரான புகைப்படங்களைப் பதிவிடும் நடிகைகளில் ஒருவர்.
உடற்பயிற்சி செய்யும் போது அவர் வெளியிட்ட சில புகைப்படங்கள், இத்தனை வளைவு, நெளிவுகளுடன் இப்போதும் இருக்கிறாரா என ஆச்சரியப்பட வைத்துள்ளது. உடற்பயிற்சிக்கான பிரத்தியேக ரோஸ் நிற ஆடையில் அவர் கொடுத்த போஸ்களைப் பார்த்தவர்கள் ஹீரோயின் வாய்ப்பு கொடுத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த அளவிற்கு அந்த போட்டோக்கள் அற்புதமாக எடுக்கப்பட்டுள்ளன.