‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகத்தான் முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு வெளியீட்டுத் தினத்தன்று மிக மிக அதிகமான பரபரப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் தான் அப்படிப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்கள். அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்து தமிழில் கடைசியாக வெளிவந்த 'விஸ்வரூபம் 2' படத்திற்குக் கூட அதிகாலை காட்சிகள் நடைபெறவில்லை. எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் காலை சிறப்புக் காட்சிகள் நடைபெற்றது. அதற்குக் கூட பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
ஆனால், லோகேஷ் கனகராஜ், அனிருத், விஜய் சேதுபதி, பகத் பாசில் என இப்போதைய பரபரப்பு கலைஞர்களுடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்ந்திருப்பது அவருடைய படங்களுக்கான கமர்ஷியல் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. 'விக்ரம்' படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் 500 ரூபாய் என அநியாய விலையில் விற்கப்பட்டாலும் கமல்ஹாசன் ரசிகர்கள் அதை பெருவாரியாக வாங்கிவிட்டார்கள். படம் வெளியாகும் ஜுன் 3ம் தேதி நாளன்று மட்டுமல்லாமல் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பல தியேட்டர்களில் முன்பதிவு சிவப்பில் தான் காட்டுகிறது.
புதிதாக முன்பதிவை ஆரம்பித்துள்ள தியேட்டர்களில் மட்டும் டிக்கெட்டுகள் இருக்கின்றன. இப்படி ஒரு ஆரம்ப கட்ட வரவேற்பை கமல்ஹாசன் எதிர்பார்த்திருக்கவே மாட்டார் என கோலிவுட்டில் மட்டுமல்ல தியேட்டர்காரர்களும் மகிழ்கிறார்கள்.




