டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

தமிழில் ரன், சண்டக்கோழி உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவு பெற்ற நடிகையாக வலம் வந்தார் மலையாள நடிகை மீரா ஜாஸ்மின். சினிமாவில் பீக்கில் இருக்கும்போதே மாண்டலின் ராஜேஷ் என்பவருடன் காதல் வயப்பட்டதாக கிசுகிசுக்கள் வெளியாகின. இதை உறுதிப்படுத்துவது போல் இருவரும் சில நிகழ்ச்சிகளில் இணைந்தும் பங்கேற்றனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக கடந்த 2014ஆம் வருடம் அனில் ஜான் டைட்டஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து ஒதுங்கி அதிர்ச்சி அளித்தார் மீராஜாஸ்மின்.
அதைத்தொடர்ந்து அடுத்த இரண்டு வருடங்களிலேயே மீரா ஜாஸ்மின் அவர் கணவரை விட்டு பிரிகிறார் என்கிற செய்தியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதுபற்றி இப்போது வரை மீரா ஜாஸ்மின் எந்தவிதமான கருத்தும் கூறவில்லை. அதேசமயம் மீண்டும் தற்போது சினிமாவில் நடிப்பதற்காக மும்முரமாக களமிறங்கியுள்ளனர் மீரா ஜாஸ்மின். மேலும் இதுவரை இல்லாத வகையில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும் சோசியல் மீடியாவை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது மலையாள இயக்குனர் அருண் கோபியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார் மீரா ஜாஸ்மின். திலீப் நடித்த ராம்லீலா மற்றும் மோகன்லால் மகன் நடித்த 21ஆம் நூற்றாண்டு என இரண்டு படங்களை மட்டுமே இயக்கிய அருண்கோபி, மீரா ஜாஸ்மின் நடித்த எந்த ஒரு படத்தையும் இயக்கியது இல்லை. மீரா ஜாஸ்மின் சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த சமயத்தில் கூட இயக்குனர் அருண்கோபி உங்கள் மனதுக்கு பிடித்தவருடன் உங்கள் நேரத்தை செலவிடுவது தான் உங்கள் வாழ்க்கையிலே சிறந்த ஒன்று என்று கூறி மீரா ஜாஸ்மின் பற்றி குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான் அருண்கோபியுடன் மீரா ஜாஸ்மின் இருக்கும் புகைப்படம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒருவேளை இவர்கள் இருவருக்கும் காதலா அல்லது இருவரும் அடுத்த படத்தில் இணைந்து பணியாற்ற போகிறார்களா என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.




