பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை |

மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள்செல்வி சமீபத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது விவேக் வாழ்ந்த வீடு அமைந்திருக்கும் சாலைக்கு அவரது பெயரை சூட்ட வேண்டும் என்ற கோரிக்கை மனுவை அளித்தார். இந்தநிலையில் சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் அதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ‛மறைந்த நடிகர் விவேக்கின் மனைவி அருள் செல்வியின் கோரிக்கையை ஏற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் விவேக் வசித்த தெருவுக்கு அவரது பெயரை சூட்டி அரசாணை வெளியிட்டுள்ளார். வருகிற மே மாதம் மூன்றாம் தேதி விவேக்கின் பெயர் கொண்ட தெருவின் பெயர் பலகை திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும்' அவர் தெரிவித்துள்ளார்.