பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகர் விவேக்கை நினைவுகூர்ந்து கொண்டாடும் வகையில் விஜய் டிவி நடத்தும் சின்ன கலைவாணர் விவேக் என்கிற நிகழ்ச்சியில் விவேக்கின் சகோதரி கலந்து கொண்டார். அதில், அவர் விவேக் குறித்து இதுவரை யாரும் அறிந்திராத தகவல்களை கூறியுள்ளார்.
நகைச்சுவை மன்னனாக வெள்ளித்திரையில் வலம் வந்து மக்களை மகிழ்வித்த மாபெரும் கலைஞர் நடிகர் விவேக். விவேக் கடந்த ஏப்ரல் மாதம் யாரும் எதிர்பாரத வகையில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது பெருமைகளையும், நினைவுகளையும் கொண்டாடும் வகையில் விஜய் டிவியில் சின்ன கலைவாணர் விவேக் என்கிற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. அதில் விவேக்கின் சகோதரி கலந்து கொள்கிறார். இதுவரை விவேக் குறித்து வெளியுலகினர் பலரும் அறிந்திராத தகவல்களை அந்நிகழ்ச்சியில் அவர் பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக வெளியான புரோமோவில் நடிகர் விவேக் சிறுவயதில் இசை மீது கொண்டிருந்த அளவு கடந்த ஆர்வமும், எந்த இசை கருவியானாலும் அதை உடனே கற்றுக்கொண்டு வாசிக்கும் அவரது திறமை குறித்தும் அவர் பேசிய பதிவுகள் வெளியாகியுள்ளது.
சின்ன கலைவாணர் விவேக் நிகழ்ச்சியின் இந்த எபிசோட் வருகிற ஞாயிறு மதியம் 3 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது