டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் |

அஜித் நடிப்பில் வீரம், விவேகம், வேதாளம், விஸ்வாசம் என நான்கு படங்களை அடுத்தடுத்து இயக்கியவர் சிறுத்தை சிவா. இந்த நிலையில் ரஜினி நடிப்பில் அண்ணாத்த படத்தை இயக்கிய சிறுத்தை சிவா அடுத்தபடியாக அஜித்தின் 63வது படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன. தற்போது வினோத் இயக்கும் தனது 61வது படத்தில் நடித்து வரும் அஜித், தனது 62வது படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க போகிறார். இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் அஜித்குமாருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் சிறுத்தை சிவா.
இந்நிலையில் அவரிடத்தில் அஜித்தின் 63வது படம் குறித்த அறிவிப்பை அஜித் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள். அதோடு, சார் சீக்கிரம் அறிவிப்பு விடுங்க. ரசிகர்கள் எல்லோரும் மரண வெயிட்டிங்குல இருக்கோம். விஸ்வாசம், விவேகம் மாதிரி தரமா அஜித்தை வைத்து ஒரு சம்பவம் பண்ணி விடுங்கள் என்று சிறுத்தை சிவாவுக்கு அஜித் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.