இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் | ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' |
சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்துள்ள ‛டான்' படம் மே 13ல் ரிலீஸாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்திருக்கிறது. இந்த நிலையில் தனது சமூக வலைத்தளத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், சனிக்கிழமை என்றாலே பார்ட்டி தான். அதனால் சனிக்கிழமை டான் படத்தின் பிரைவேட் பார்ட்டி என்ற பாடல் மாலை 5 மணிக்கு வெளியாகிறது என்று தெரிவித்துள்ளார்.
இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுத, அனிருத் இசையமைத்து ஜோனிடா காந்தி உடன் இணைந்து பாடி உள்ளார். இவர்கள் மூவர் கூட்டணியில் ஹிட் அடித்த ‛செல்லம்மா செல்லம்மா, அரபிக் குத்து' வரிசையில் இந்த பாடலும் ஹிட் வரிசையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.