300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் | பிளாஷ்பேக்: சினிமாவுக்கு பாட்டு எழுதிய காளிமுத்து | பிளாஷ்பேக்: நாகேஸ்வர ராவின் தம்பியாக நடித்த நம்பியார் | 3 மணி நேரம் 40 நிமிடம் ஓடப் போகும் 'பாகுபலி தி எபிக்' | 3 ஹீரோக்கள் இணையும் படம் | பிளாஷ்பேக்: மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து, முதன்மை குழந்தை நட்சத்திரம் என்ற உச்சம் தொட்ட “பேபி சரோஜா” | பிரதீப்பின் ‛எல்ஐகே' தள்ளிவைப்பு : 'டியூட்' தயாரிப்பாளர் மீது 'எல்ஐகே' தயாரிப்பாளர் குற்றச்சாட்டு |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக பெயரிடப்படாத புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் ஏப்ரல் 28ம் தேதி நள்ளிரவு வரை படப்பிடிப்பு நடைடபெற்றது. அப்போது நடுஇரவு 12 மணிக்கு சமந்தாவின் பிறந்தநாளைக் கொண்டாட படப்பிடிப்புக் குழுவினர் அவருக்குத் தெரியாமலேயே ஏற்பாடு செய்தனர்.
உண்மையாக படப்பிடிப்பு நடத்துவது போல ஒரு சோகமான காட்சியைப் படமாக்கினர். சமந்தாவும் சீரியசாக கண்ணீர் விட்டு நடித்துக் கொண்டிருக்க பதிலுக்கு வசனம் பேச வேண்டிய விஜய் தேவரகொன்டா, சமந்தாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு 'சமந்தா, ஹேப்பி பர்த்டே' என வசனம் பேச மொத்த குழுவும் சமந்தாவிற்கு 'ஹேப்பி பர்த்டே' என சொல்லி கேக் வெட்டி கொண்டாடினர்.
நடந்தது படப்பிடிப்பு அல்ல, தன்னுடைய பிறந்தநாளுக்காக செய்யப்பட்ட செட்டப் எனத் தெரிந்து சமந்தா மகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார்.